மஹிந்த ராஜபக்ஷவிற்கு இதுவரையில் வழங்கப்பட்டு வந்த முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கான பாதுகாப்பு மற்றும் சிறப்புரிமைகள் உடனடியாக நீக்கப்படவேண்டும் என அசாத் சாலி குறிப்பிடுகின்றார்.
அத்துடன் அவருக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்டும பாதூகப்புக்கள் மாத்திரமே வழங்கப்படவேண்டும் என்றும் கூறினார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்து குறிப்பிட்ட அவர், நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் மஹிந்த ராஜபக்ஷ முன்னாள் ஜனாதிபதி என்ற அந்தஸ்தை இழந்து, தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக மாறியுள்ளார் என்று கூறினார்.
எனவே அவருக்கு வழங்கப்பட்டு வந்த முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கான பாதுகாப்பு மற்றும் சிறப்புரிமைகள் நீக்கப்பட்டு சாதாரண பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கான சலுகைகள் வழங்கப்படவேண்டும் என்றார்.
அத்துடன் மஹிந்த மக்களுக்கு செய்த துரோகங்கள், அநீதிகளுக்காகவே அவருக்கு இவ்வாறான நிலைமை ஏற்பட்டதாகவும் கூறினார்.

0 comments:
Post a Comment