ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட் ஓட்டமாவடி ஹுதா பள்ளி வீதி புகையிர கடவைக்கு அருகாமையில் வைத்து சனிக்கிழமை 15.08.2015 இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட பிரதி அமைச்சர் அமீர் அலியின் தீவிர ஆதரவாளரும் முன்னாள் வாழைசேனை பிரதேச சபைக்கான அகில இலங்கை மக்கள் சார்பாக போட்டியிட்டவருமான அமீனின் ஜனாஸா 16.08.2015ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மஃரிப் தொழுகைக்குப் பிற்பாடு  ஓட்டமாவடி மொஹைதீன் ஜும்ஆப் பள்ளிவாயல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அமீனின் ஜனாஸாத் தொழுகையில் பங்குபற்றுவதற்காக பெருந்திரளான மக்கள் ஓட்டமாவடி ஜும்ஆப் பள்ளிவாயலுக்கு வருகை தந்திருந்தமையினைக் காணக்கூடியதாக இருந்த அதே வேளை, தேர்தல் சுமூகமான முறையில் இடம்பெற வேண்டுமென்பதனைக் கருத்திற்கொள்ளப்பட்டு பிரதேசத்தில் எப்பொழுதும் போன்று அமைதி நிலைமை காணப்பட்ட வேண்டுமென்பதற்காக அமீன் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்குப் பிற்பாடு பெரும் ஆத்திரமடைந்திருந்த பிரதியமைச்சர் அமீர் அலியின் ஆதரவாளர்கள் பிரதேசத்தின் தலைமைத்துவங்களுக்குக் கட்டுப்பட்டு அமைதி காத்த  நிலைமையினையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

0 comments:

Post a Comment

 
Islah MovementIslah News © 2013. All Rights Reserved. Powered by Islah Media
Desiged By. Aslam.M
Top