முஸ்லிம் ஹைஸ்கூல் மாணவியின் கண்டுபிடிப்பால் வருடத்திற்கு 165 மில்லியன் டாலர் வருமானம்; ஐரோப்பியன் யூனியன், " இளம் விஞ்சானிக்கான" பட்டம் அளித்து கவுரவித்து உள்ளது.
எகிப்து நாட்டைச் சார்ந்த சகோதரி அஸ்ஸா பாயாதின் கண்டுபிடிப்பு , எகிப்திய பெட்ரோலியம் ஆராய்ச்சி நிறுவனத்தால் ஆராயப்பட்டு, அவர் இன்னும் சிறந்த முறையில் தன்னுடைய ஆராய்ச்சியை தொடர, சோதனைகூட வசதிகள் செய்து கொடுத்துள்ளனர்.
எகிப்த், வருடத்திற்கு மில்லியன் டன் பிளாஸ்டிக் குப்பையை உற்பத்தி செய்கின்றது. அஸ்ஸாவின் கண்டுபிடிப்பால் இவ்வளவு குப்பையும், 78 மில்லியன் டாலர் மதிப்புள்ள எரிபொருளாக மாற்றப்பட்டுவிடும்.
இதை 165 மில்லியன் டாலர் மதிப்புள்ளதாக மாற்ற முடியம் என்று அஸ்ஸா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
" இஸ்லாம் பெண்களை கொடுமை படுத்துகின்றது", "ஹிஜாப் பிற்போக்குத்தனம்", என்று கூக்குரலிடும் பிற்போக்குவாதிகள் தங்களை மாற்றிக்கொள்வார்கள் என்று நம்புகின்றோம்.
எங்களின் சகோதரிகள், தலையைத் தான் மூடுகின்றார்களே தவிர, மூளையை அல்ல.
இந்த சகோதரி மென்மேலும், தன்னுடைய ஆராய்ச்சியில் சாதித்து, உலக மக்களின் நல்வாழ்விற்கு பாடுபட இறைவனை வேண்டுகின்றோம்.

0 comments:

Post a Comment

 
Islah MovementIslah News © 2013. All Rights Reserved. Powered by Islah Media
Desiged By. Aslam.M
Top