
தற்போது காணப்படும் கல்வி முறைமையை மாணவர்களின் மனோநிலைமைக்கு ஏற்ற வகையில் மறுசீரமைப்பதற்கு தேசிய கல்வி நிறுவகம் தீர்மானித்துள்ளது.
வயது மட்டத்திற்கு ஏற்ற வகையில் கல்வி முறைமை காணப்படாததன் காரணமாக மாணவர்கள் தேவையற்ற மன உலைச்சலுக்கு உள்ளாகுவதாக தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் குணபால நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் கல்விமான்கள் மற்றும் உளவியல் நிபுணர்களினூடான அறிக்கை பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய தரம் ஒன்று முதல் ஐந்தாம் தரம் வரையும், ஆறாம் தரம் முதல் 11 ஆம் தரம் வரையும் 12 மற்றும் 13 ஆம் தரங்கள் என வகைப்படுத்தப்பட்ட கல்வி மறுசீரமைப்பு முறை மேற்கொள்ளப்படவுள்ளது.
அதற்கான மாதிரி வடிவமைப்பினை மேற்கொள்வதற்கு குழு ஒன்று நியமிக்கப்படும் எனவும் தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் குணபால நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.
0 comments:
Post a Comment