வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கேற்ப, பிரச்னைகளும் பின்தொடர்ந்து வந்துகொண்டேதான் உள்ளது. ஸ்மார்ட் போன் உலக மக்களிடையே மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியது. உலகம் உங்கள் கையில் என்ற அளவுக்கு ஸ்மார்ட் போன்களின் செயல்பாடுகள் உள்ளது. வீட்டிலிருந்த படியே அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்துகொள்ளும் அளவுக்கு ஸ்மார்ட் போன்கள் மக்கள் வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாக அமைந்துவிட்டது. உலக மக்கள் தொகையில் சுமார் 70 சதவீதம் பேர் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்திவருகின்றனர்.
இந்த வகை போன்களுக்காக ஒரு லட்சத்திற்கும் அதிகமான மென்பொருள்களை பல்வேறு நிறுவனங்கள் தயாரித்துள்ளது. மக்களின் வாழ்க்கையை எளிதாக்கவே இந்த மென்பொருள்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்படும் மென்பொருள்களில் பெரும்பாலானவை இணையதளம் மூலமாகவே இயங்கும். இதனால் இந்த மென்பொருள்களை பயன்படுத்தும் போது, வைரஸ் மற்றும் மால்வேர்(தேவையில்லா தகவல்) தொகுப்புகளால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளது.
இவ்வாறு பாதிப்பு ஏற்படும் போது நமது செல்போனில் உள்ள தகவல்களை சமூக விரோதிகள் ஹேக் செய்து எடுக்க எளிதாக மாறிவிடுகிறது. குறிப்பாக மால்வேர் புரோகிராம்களில் எளிதாக ஹேக் செய்துவிடுகின்றனர். இதனால் செல்போன்களில் நாம் பதிவு செய்து வைத்த ரகசிய தகவல்கள் அனைத்தும் எளிதாக திருடப்படுகிறது, மேலும் இணையதளத்தில் முக்கிய வேலைகளில் ஈடுபட்டிருக்கும் போது தொடர்ந்து விளம்பர செய்திகளை திரைக்கு கொண்டுவந்து தொந்தரவு கொடுக்கும்.
மேலும் முக்கிய தகவல்கள் திருடப்படுவதன் மூலம், சமூக விரோதிகள் உங்களின் அடையாளத்தை பயன்படுத்தி சட்டவிரோத செயல்களில் ஈடுபட வாய்ப்புகள் உள்ளது. உங்கள் செல்போனை ஹேக் செய்து, அதை செயலிழக்க வைக்கலாம். இவற்றை தடுக்க ஸ்மார்ட் போன்களில் உரிய ஆன்டிவைரஸ் மென்பொருளை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும், மேலும் தேவையில்லாத மென்பொருட்களை பதிவிறக்கம் செய்யாமல் இருப் பது மிகவும் நல்லது.
0 comments:
Post a Comment