இந்தோனேசியாவில் இருந்து பயணித்த விமானம் பப்புவா அருகே மாயமானது
இந்தோனேசியாவில் இருந்து 54 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் ஒன்று பப்புவா அருகே தனது காட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழுந்துள்ளது.
பப்புவா மாகாணத்தின் வான்பகுதியில் சென்றபோது விமானம் காணாமல் போனதை தேசிய மீட்புக்குழு உறுதி செய்ததாக ரொய்ட்டரில் செய்தி வெளியாகி உள்ளது.
விமானத்தின் சமிக்ஞைகளுக்காக காத்திருக்கும் அதேசமயம், அதனை தேடும் பணியையும் அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர்.
ட்ரைகானா விமான நிறுவனத்திற்கு சொந்தமான இந்த பயணிகள் விமானம், ஜெயபுராவின் சென்டானி விமான நிலையத்திற்கும் ஆக்சிபில் பகுதிக்கும் இடையே பயணித்துக் கொண்டிருந்த போதே தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
விமானத்தில் 44 பயணிகள், 5 குழந்தைகள் மற்றும் 5 ஊழியர்கள் இருந்ததாக தேசிய மீட்புக்குழு டுவிட்டரில் தெரிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் எயார் ஏசியா பயணிகள் விமானம் 162 பயணிகளுடன் இந்தோனேசியாவின் சுரபயாவில் இருந்து சிங்கப்பூர் சென்றபோது விபத்துக்குள்ளாகி அனைவரும் இறந்தனர்.
இதையடுத்து, விமான பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் விதிமுறைகள் அமுல்படுத்தப்பட்ட நிலையில் தற்போது விமானம் காணாமல் போயிருப்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Islah MovementIslah News © 2013. All Rights Reserved. Powered by Islah Media
Desiged By. Aslam.M
Top