செம்மண்ணோடையில் வசிக்கும் பாத்திமா லசானா வயது 07 என்ற குழந்தைக்கு பாரிய சத்திர சிகிச்சையொன்றினை மேற்கொள்ளவிருப்பதால், மிகுந்த பொருளாதார நெருக்கடியை அக்குழந்தையின் பெற்றோர் எதிர்கொண்டுள்ளனர். இரட்டைக்குழந்தைகளில் ஒன்றான இந்தப்பிள்ளை இன்னும் பேசவில்லை. காதுகளும் கேட்பதுமில்லை.இப்பிரச்சினை பிறப்பிலிருந்தே எதிர்கொள்ளப்படுகிறது. தொடர்ச்சியான வைத்திய பரிசோதனையின் பின்னர் இவருக்கு சத்திர சிகிச்சையொன்றின் மூலம் மேற்படி குறைபாடுகளைக் குணப்படுத்த முடியுமென சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ்.பி.எடுள்கம குறிப்பிட்டுள்ளார். இதற்கான மொத்தச்செலவு சுமார் 4700000 நாற்பத்து ஏழு இலட்சம் மதிப்பிடப்பட்டுள்ளது.சத்திர சிகிச்சைக்கான இயந்திரம் மற்றும் ஏனைய செலவுகளை அரசாங்கம் பொறுப்பேற்றாலும் மேலதிக மருந்துகள் கொள்வனவு, பரிசோதனைகளுக்கான செலவாக சுமார் 500000.00 ஐந்து இலட்சம் உடனடியாக தேவைப்படுகின்றது. குறித்த தொகையினை எதிர்வரும் 30.9.2015 ம்திகதிக்கு முன்னர் வைத்தியசாலைக்கு வழங்க வேண்டிய தேவையுமுள்ளது. அப்படி வழங்காவிட்டால், இதே தேவையுடைய வேறொரு பிள்ளைக்கு மேற்படி சிகிச்சைக்கான வாய்ப்பு வழங்கப்பட்டு விடும். இவருடன் இவர் குடும்பத்தில் நான்கு பிள்ளைகள் இருப்பதாலும், தந்தையின்றி தாயின் பராமரிப்பில் இப்பிள்ளைகள் வளர்வதாலும் ஈகை குணமுள்ளவர்கள் இப்பிள்ளைக்கு உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். உங்கள் நன்கொடைகளை அனுப்ப வேண்டிய விபரம் 
MRS M.S. NUFAITHA  
ACC NO: 6496065 BANK OF CEYLON  VALAICHCHENAI 

0 comments:

Post a Comment

 
Islah MovementIslah News © 2013. All Rights Reserved. Powered by Islah Media
Desiged By. Aslam.M
Top