சிம் அட்டைகள் இல்லாமல் இனி செல்போன் பாவிக்கலாம்
செல்போன்களில் நெட்வேர்க் (Network) சேவைகளை பெற இனி சிம் அட்டைகளை பயன்படுத்த வேண்டிய தேவை இருக்காது என தகவல் வெளியாகி உள்ளது.
அப்பிள், சம்சுங் போன்ற முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் ‘வேர்ச்சுவல் (virtual) சிம்களை அறிமுகப்படுத்துவது குறித்து ஆலோசனை செய்து வருகின்றன.
இந்த வகை ‘e-SIM’ மூலம் எளிதாக வாடிக்கையாளர்கள் வெவ்வேறு நெட்வேர்க்குகளுக்கு மாறிக் கொள்ளலாம். ஸ்மார்ட்போன்களின் இண்டர்பேஸ் ஸ்கிரீன் வழியாகவே சிம்மை செயற்படுத்தி விடலாம்.
இதுபோன்ற முயற்சியில் ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன் களமிறங்கிய அப்பிள் நிறுவனம் தனது சொந்த நெட்வேர்க் சிம் அட்டைகளை அறிமுகப்படுத்தி இருந்தது.
இந்நிலையில், அதே சேவையை போல வேர்ச்சுவல் சிம்களை அனைத்து கருவிகளிலும் கொண்டு வர மொபைல் நெட்வேர்க் நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இது சம்பந்தமாக ஏடி அண்ட் டி, டி-மொபைல், வோடாபோன், ஒரேஞ்ச், எடிசலாட், ஹட்சிசன் வாம்போவா, டெலிபோனிகா ஆகிய பன்னாட்டு நிறுவனங்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன.
2016 ஆம் ஆண்டில் இந்த வேர்ச்சுவல் சிம்கள் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றன.

0 comments:

Post a Comment

 
Islah MovementIslah News © 2013. All Rights Reserved. Powered by Islah Media
Desiged By. Aslam.M
Top