இலங்கையின் 15வது பாராளுமன்றத்தேர்தல் நடைபெற இன்னும் இரண்டு நாட்கள் இருக்கும், நிலையில் அதற்கான பிரச்சாரக் கூட்டங்கள் பரவலாக அனைத்துக் கட்சிகளினாலும் நடாத்தப்படு வருகின்றன. இந்த வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகியன இணைந்து நடத்திய இறுதித்தேர்தல் பிரச்சாரக் கூட்டம் காத்தான்குடி பிரதான வீதி கபுறடி வீதிச்சந்தியில் இடம்பெற்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொள்கை பரப்புச் செயலாளர் ULMN.முபீன் BA அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இப்பிரச்சாரக் கூட்டத்தில் பெய்த மழையினையும் பொருட்படுத்தாது ஆயிரக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டனர். இதன் போது நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட 2ம் இலக்க வேட்பாளருமான பொறியியலாளர் அப்துர் ரஹ்மான், சகோ, முஜீப் இப்ராஹீம், சட்டமுதுமானி முஹம்மது அஸ்ஹர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கரஸின் மட்டக்களப்பு மாவட்ட 5ம் இலக்க வேட்பாளர் பொறியியலாளர் சிப்லி பாறூக், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளர் செய்யித் அலிசாஹிர் மௌலான ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். நள்ளிரவு 12 மணி வரை இடம்பெற்ற இந்த இறுதிப் பிரச்சாரக் கூட்டத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் அல்ஹாஜ் ஹாபிஸ் நஸீர் அஹமட், காத்தான்குடி நகர சபையின் முன்னாள் நகர பிதா மர்சூக் அஹமட் லெப்பை, முஸ்லிம் காங்கிரஸின் காத்தான்குடி மத்திய குழு உறுப்பினர்களான இல்மி அஹமட் லெப்பை, சகோ, மதீன், சகோ, அன்சார், முன்னாள் நகர சபை உறுப்பினர் MSM.சியாட் உள்ளிட்ட நல்லாசிக்கான தேசிய முன்னணி மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
Home
»
National News
» காத்தான்குடியில் இடம்பெற்ற SLMC + NFGG யின் இறுதித்தேர்தல் பிரச்சாரக் கூட்டம்:பெருந்திரளான மக்கள் பங்கேட்பு
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment