
சிறுபோக நெற்கொள்வனவின் நிமித்தம் நாடளாவிய ரீதியில் 125 நெற்கொள்வனவு மத்திய நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
அரச நிர்ணய விலைக்கு அமைய இதுவரை 30 மெட்றிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக நெல் விநியோக சபையின் தலைவர் எம்.பீ. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அடுத்த வாரம் முதல் சிறுபோக நெல் அறுவடை சந்தைக்கு அதிகபடியாக வரும் என எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விவசாயி ஒருவரிடம் அதிகபட்சமாக 2000 கிலோகிராம் நெல் கொள்வனவு செய்யப்படும் எனவும் நெல் விநியோக சபையின் தலைவர் எம்.பீ. திசாநாயக்க கூறியுள்ளார்.
அதற்கமைய ஒரு கிலோகிராம் சம்பா 50 ரூபாவிற்கும் நாட்டரிசி 45 ரூபாவிற்கும் கொள்வனவு செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment