
2015 பாராளுமன்றத் தேர்தலைக் கண்காணிப்பதற்காக சர்வதேச கண்காணிப்பாளர்கள் 172 பேர் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பாளர்கள் 80 பேரும், தெற்காசிய தேர்தல் அதிகாரிகள் சங்கத்தின் 29 கண்காணிப்பாளர்களும் ஆசிய தேர்தல் அதிகாரிகள் ஒன்றியத்தின் 3 கண்காணிப்பாளர்களும் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் 15 கண்காணிப்பாளர்களும் இலங்கை வந்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.
இதுதவிர, பெப்ரல் அமைப்பின் அழைப்பின் பேரில், சர்வதேச கண்காணிப்பாளர்கள் 15 பேரும், தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் நிலையத்தின் அழைப்பின் பேரில் 30 சர்வதேச கண்காணிப்பாளர்களும் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்தார்.
இந்த சர்வதேச கண்காணிப்பாளர்கள் நாட்டின் அனைத்து தேர்தல் தொகுதிகளுக்கும் சென்று தேர்தல் நடவடிக்கைகளைக் கண்காணிக்கவுள்ளனர்.
தேர்தல் முடிவடைந்த பின்னர் சர்வதேச கண்காணிப்பாளர்களால் தேர்தல் தொடர்பான முழுமையான அறிக்கை தயாரிக்கப்பட்டு, தேர்தல்கள் ஆணையாளரிடமும், தமக்கு அழைப்பு விடுத்துள்ள தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளிடமும் கையளிக்கப்படவுள்ளது.
0 comments:
Post a Comment