வாழைச்சேனை பகுதியில் அடையாளம் தெரியாதோரால் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்று பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டது.
வாழைச்சேனை ஹுதா பள்ளி வீதியிலுள்ள ரயில்வே கடவைக்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த நபர், வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்த 35 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.











0 comments:
Post a Comment