
பொதுத் தேர்தல் கண்கானிப்பு நடவடிக்கைகளில் 162 சர்வதேச கண்காணிப்பாளர்கள் ஈடுபடவுள்ளதாக தேர்ல்கள் செயலகம் தெரிவிக்கின்றது .
ஐரோப்பா சங்கத்தின் 80 கண்காணிப்பாளர்களும் 29 தெற்காசிய தேர்தல் அதிரகாரிகள் சங்கத்தின் கண்காணிப்பாளர்களும் ஆசிய தேர்தல் அதிரகாரிகள் மையத்தின் மூன்று கண்காணிப்பாளர்களும் ,பொதுநலவாய அமைப்பின் 15 கண்கானிப்பாளர்களும் அடங்குவதாக செயலகம் குறிப்பிட்டுள்ளது.
தமது அழைப்பின் பெயரில் நாட்டிற்கு வருகை தந்துள்ள 14 சர்வதேச கண்காணிப்பாளர்கள் இன்றைய தினம் கண்கானிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியராய்சி கூறுகின்றார்.
தமது அழைப்பின் பெயரில் வருகை தந்துள்ள 8 நாடுகளை சேர்ந்த 21 சர்வதேச கண்காணிப்பாளர்கள் தமது தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் நிலையத்தின் தேசிய இணைப்பாளர் மஞ்சுல கஜநாயக்க தெரிவிக்கின்றார்.
இதே வேளை தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு 20,000 அதிக உள்நாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இம் முறை தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கான 12,000 தேர்தல் கண்காணிப்பாளர்கள் ஈடபடுத்தப்பட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியராய்சி தெரிவித்துள்ளார் .
இலங்கையின் அனைத்து தேர்தல் தொகுதிகளையும் பிரதிநிதித்துவபடுத்தும் வகையில் 9,000 கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கெஃபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கீரத்தி தென்னகோன் தெரிவித்துள்ளார் .
தமது கண்கானிப்பு நடவடிக்கைகளுக்கு 4,000 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் வன்முறைகளை கண்கானிக்கும் நிலையத்தின் தேசிய இணைப்பாளர் மஞ்சுல கஜநாயக்க தெரிவிக்கின்றார்.
0 comments:
Post a Comment