உணவு கட்டுப்பாட்டில் இருக்கும் பெண்கள் உள்பட அனைத்து பெண்களும் கட்டாயம் உண்ண வேண்டியவையாக ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் 5 உணவு பட்டியல் வருமாறு:
கீரை வகைகள்: உங்களது உணவில் கீரை வகைகள் இல்லாமல் உங்களுக்கான முழு ஊட்டச்சத்து கிடைக்காது. எனவே பசலைக் கீரை, அவரை, வெந்தயக் கீரை ஆகியவற்றை பெண்கள் கட்டாயம் தங்களது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவற்றில் வைட்டமின் சி, கே மற்றும் ஃபோலிக் அமிலம் ஆகியவை உள்ளன. இவை கண் பார்வைக்கும் மிக நல்லது.அத்துடன் கால்சியம், மெக்னீசியம், இரும்பு மற்றும் பொட்டாசியம் ஆகிய நான்கு அத்தியாவசிய சத்துக்களும் இவற்றில் அடங்கியுள்ளன. எனவே இவை உடல் நலத்திற்கு மிகவும் பயனளிக்கக் கூடியவை.
முழு தானியங்கள்: முழு தானியங்களில் 96 விழுக்காடு வரை நார்ச்சத்து, அத்தியாவசிய ஊட்டச்சத்து மற்றும் வைட்டமின்கள் அடங்கியுள்ளன. இவை உடல் எடையை அதிகரிக்க செய்யாது என்பதால் அச்சமின்றி உண்ணலாம்.
 கொட்டை பருப்புகள்: பாதாம், முந்திரி போன்ற கொட்டை பருப்புகள் உங்களது உணவு பட்டியலில் கட்டாயம் இடம்பெற வேண்டியவை ஆகும்.புரதம், மெக்னீசியம், பி மற்றும் இ வைட்டமின் சத்துக்களை கொண்ட இந்த பருப்புகளை காலை சிற்றுண்டியிலோ அல்லது சாலட்டிலோ அல்லது தயிரில் தூவியோ உண்ணலாம். இருதய நோய் மற்றும் புற்று நோய்க்கு எதிராக போராடும் ஆற்றல் இவற்றுக்கு உண்டு.மேலும் கொழுப்பு கலோரிகளை கொண்டதும் கூட.ஆனால் இந்த கொழுப்பு இருதயத்திற்கு நன்மை செய்யக் கூடிய நல்லவகை கொழுப்பு ஆகும்.மாலை சிற்றுண்டியாக கூட இதனை சாப்பிடலாம். ஆனால் அதிக அளவில் சாப்பிட்டு விடக்கூடாது.ஒரு வாரத்தில் 15 முதல் 20 எண்ணிக்கையிலான பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு, அக்ரூட் பருப்பு ஒருவருக்கு போதுமானது.
தயிர்: குறைந்த கொழுப்புடைய அல்லது கொழுப்பற்ற தயிரில் வைட்டமின்கள், புரதம் மற்றும் கால்சியம் அடங்கியுள்ளது.மேலும் உடலுக்கு நன்மை பயக்ககூடிய பாக்டீரியாவும் தயிரில் உள்ளது. வாரம் ஒன்றுக்கு மூன்று முதல் நான்கு கோப்பை தயிர் ஒருவருக்கு போதுமானது. ஆனால் அதில் சர்க்கரை சேர்த்துக் கொள்ளக்கூடாது.அதற்கு பதிலாக வெறும் தயிரில் பழங்கள் அல்லது பெர்ரி போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம்.

0 comments:

Post a Comment

 
Islah MovementIslah News © 2013. All Rights Reserved. Powered by Islah Media
Desiged By. Aslam.M
Top