அஸ்ரப் ஏ சமத் ஓட்டமாவடியில் நடைபெற்ற கொலைச்சம்பவத்திற்கு பிரதியமைச்சா் அமீர் அலி அவா்கள் முஸ்லீம் காங்கிரஸ் தலைவா் ஹக்கீம் மற்றும் கல்குடாவில் முஸ்லீம் காங்கிரஸ் சாா்பாக போட்டியிடும் ரியாழ் ஆகியோரைச் சம்பந்தப்படுத்தி விசமத்தனமான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றாா். இவ்விடயம் பற்றி ஊடகங்களிலும் அவா் கருத்து தெரிவித்துள்ளார். இது இவரது வங்குரோத்து அரசியலைக்காட்டுகின்றது. இதன் மூலம் அனுதாப வாக்குகளைப் பெற்று, இது எப்படியோ பாராளுமன்ற உறுப்பினராகி விடலாமென அவா் செய்யும் சூழ்ச்சியாகும். இது தோ்தல் காலத்தில் இவ்வாறு அவா் கருத்துத்தெரிவிப்பது தோ்தல் சட்டத்தினை மீறும் செயலாகும். இது பற்றி தோ்தல் ஆணையாளருக்கும் அறிவித்துள்ளோம். அதற்காக எமது கட்சியின் சட்டத்தரணிகள் 500 மில்லியன் ரூபா மான நஸ்டயீடு கோரி வழக்குத்தாக்கல் செய்யவுள்ளனர். அதற்கான கடிதமும் அமீா் அலிக்கு சட்டத்தரணிகளால் அனுப்பி வைக்கப்படுமென கண்டியிலிருந்து அமைச்சா் ஹக்கீம் அவர்களின் ஊடகச்செயலாளா் டொக்டா் ஹாபீஸ் ஹக்கீம் ஊடகங்களுக்குத் தெரிவித்தாா். முஸ்லீம் கட்சிலிருந்து அரசியல் முத்திரையைப் பெற்று அரசியல்வாதியாக வந்த அமீா் அலி மற்றும் அவரது கட்சித்தலைவரும் தற்பொழுது முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் மீதும் அதன் தலைமைத்துவத்தின் மீதும் பழி சுமத்துகின்றனர். இந்தக் கட்சிக்காகவே எத்தனையோ உயிா்கள் இரத்தங்கள்  இந்த மண்னில் சிந்தப்பட்டுள்ளன. ஆனால், ஒரு போதும் இன்னொரு முஸ்லீம் சகோதரனை உயிர்ப்பலி எடுத்து அரசியல் செய்ய வேண்டிய தேவைப்பாடு இந்தக் கட்சிக்குக் கிடையாது. ஓட்டாமாவடியில் நடைபெற்ற கொலைச்சம்பவத்தில் பின்னால் யாருள்ளனா் என்பதை அறிய பொலிசார், சட்டம், நீதியிருக்கும் போது, அமீா் அலி முஸ்லீம் காங்கிரஸ் வேட்பாளருக்கும் கட்சியின் தலைவருக்கும் எதிராக விரலை நீட்டுகின்றாா். தோ்தல் காலத்தில் அப்பிரதேச வாக்குகளைக் கவருவதற்கு வீண் பழி சுமத்துகின்றனா். இதனை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்தாா். முஸ்லீம் காங்கிரஸ் கட்சிக்காக  மறைந்த தலைவா் எம்.எச்.எம். அஸ்ரப் உயிா் நீத்தாா்கள்.  அதே போன்று, மடவளையில் 8 இளைஞா்கள், சாய்ந்தமருதுரில் இளைஞா் பலி, பேருவளையில் இளைஞா் பலி. இவ்வாறு இக்கட்சிக்காகவே  கட்சித்தொண்டா்கள் இரத்தம் சிந்தி மடிந்த வரலாறுள்ளது. அது மட்டுமல்ல, விடுதலைப்புலிகள் போன்ற இதர ஆயுதக்குழுக்களாலும் இக்கட்சியின் தொண்டா்கள், உறுப்பினர்கள் மடிந்திருக்கின்றாா்கள். முஸ்லீம் காங்கிரஸ் ஒரு போதும் இன்னொரு கட்சியின் ஆதரவாளரைக் கொலை செய்ய வேண்டிய தேவைப்பாடில்லை. இந்தக் கொலைக்கு பின்னுள்ள சதி, அந்தரங்கம் பற்றி தெளிவுபடுத்துவதுடன், சம்பந்தப்பட்டவா்களை உரியவா்கள் சட்டத்தின் முன் நிறுத்துவர். இதனை வெளிக்கெணர எமது தலைவரும் சட்டத்தரணிகளும் நடவடிக்களை 

0 comments:

Post a Comment

 
Islah MovementIslah News © 2013. All Rights Reserved. Powered by Islah Media
Desiged By. Aslam.M
Top