
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் உறுப்பினர்களை தெரிவு செய்யும் பிரச்சினைக்கு இன்று மதிய நேரமளவில் தீர்வு கிடைத்துவிடும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஏற்படுத்தப்பட்ட உடன்பாட்டின் படி தேசியப் பட்டியலில் இடம்பெறுவோர் பெயர்கள் விபரம் அடங்கிய ஒரு பட்டியல் மாத்திரமே வழங்கப்பட்டிருப்பதாகவும், மாறாக பல பெயர்ப் பட்டியல்கள் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களை தெரிவு செய்வதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் அததெரண சுசில் பிரேமஜயன்தவிடம் வினவியிருந்ததற்கே இவ்வாறு பதிலளித்தார்.
இதேவேளை ஶ்ரீலங்க சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு இன்று காலை கூடியுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று காலை 9 மணியளவில் கூடியுள்ளது.
0 comments:
Post a Comment