ஜனவரி 8ம் திகதி புரட்சி மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுகடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி நாட்டில் ஏற்பட்ட புரட்சியை மக்கள் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

தேசிய வேலைத்திட்டம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

பதவியேற்றதன் பின்னால் அனைத்து கட்சித் தலைவர்களுடனும் தேசிய வேலைத்திட்டம் ஒன்றை வகுத்து நடைமுறைப்படுத்துவதற்கு தயாராக இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார். 

இன்று காலை அலரி மாளிகை முற்றவெளியில் உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

மதத் தலைவர்கள், சிவில் தலைவர்கள் உளி;ட்ட அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கி எதிர்வரரும் 5 அல்லது 2 ஆண்டுகளில் நாட்டின் பிரதாண பிரச்சினைகளை தீர்ப்பதற்கு உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தேசிய உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்திக் கொண்டு அதனூடாக கொள்கைத்திட்டம் ஒன்றை வகுத்து கொள்வதாகவும் குறிப்பிட்டார். 

அனைத்து கட்சி தலைவ​ர்களுடனும் ஒன்றிணைந்து சமரசமான வேலைத் திட்டம் ஒன்றினை மேற்கொள்வதற்கு இந்த நல்லாட்சியின் அனுமதியை் பெற பாராளுமன்றத்தை கேட்டுக் கொள்வதாகவும், அதற்காக சமராசத்துடன் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுப்பதாகவும் அதனை புறக்கணிப்பது மக்கள் வழங்கிய ஆணையை புறக்கணிப்பது போன்றாகும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

இதுதவிர ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்றிரவு பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் இந்த வாரத்திற்குள் பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்பார் என்றும் அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments:

Post a Comment

 
Islah MovementIslah News © 2013. All Rights Reserved. Powered by Islah Media
Desiged By. Aslam.M
Top