037-min-min நாட்டில் நல்லாடசியின் பின்னர் கிடைத்திருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியினூடாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேசங்களும் பாகுபாடின்றி அபிவிருத்தி செய்யப்படும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்;;.எஸ்.அமீர் அலி நேற்று (20.08.2015) வாழைச்சேனை ஹைறாத் பள்ளிவாயலுக்கு வருகை தந்த போது, அங்கிருந்த மக்களிடம் உரையாற்றுகையிலேயே மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடாத்தொகுதி முஸ்லீம் பிரதேச மக்களின் அதிகமான வாக்கினை நான் எதிர்பார்த்திருந்தேன். அதே போன்று, அம்மக்கள் எனக்கு வாக்களித்திருந்தாலும், அதனுடன் காத்தான்குடி, ஏறாவூர் பிரதேச முஸ்லீம் மக்களும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ், கிறிஸ்தவ மக்களும் பரவலாக எனது வெற்றிக்காக அதிக பங்களிப்பினைச் செய்திருக்கின்றார்கள் அவர்கள் செய்த அந்த உதவியை என்னால் மறக்க முடியாது. நடைபெற்ற தேர்தலுக்கு முன்னர் இடம்பெற்ற எனது தேர்தல் பிரச்சாரக்கூட்டங்கள் அனைத்திலும் எமது மாவட்டத்தின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பாகவும், எல்லை நிர்ணயம் தொடர்பாகவும் தொடர்ந்து பேசியதுடன், எனது அரசியலுக்குத் தொடர்ந்து எதிரியாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கும் சகோதரர்களுக்கும் அழைப்பு விடுத்தேன். கடந்த காலங்களில் என்னால் ஏதும் பிழைகள் ஏற்பட்டிருந்தால் பகிரங்கமாக மன்னிப்புக் கோருகிறேன் என்றும் அழைப்பு விடுத்திருந்தேன். அவர்கள் எனது கோரிக்கையை ஏற்றுக் கொண்டதாக எனக்குத் தெரியவில்லை. மாவட்டத்தின் அபிவிருத்திக்காகவும் இன ஒற்றுமைக்காகவும் எங்களது அணியில் வந்து இணைந்து கொள்ளமாறு அவ்வாறானவர்களுக்கு மீண்டும் அழைப்பு விடுக்கிறேன். ஆனால், அவர்கள் தொடர்ந்து அவ்வாறு தான் இருக்கப் போகின்றார்கள் என்றால், இனியும் நான் அவர்களுக்குப் புத்தி சொல்வதற்குத் தயாராக இல்லை. ஏனென்றால், விதண்டாவாதம் பேசிக்க் கொண்டிருப்பவர்களுக்கு நாம் எதைச் சொன்னலும், அதில் என்ன பிழை இருக்கின்றது என்று தேடிக்கொண்டிருப்பார்களே தவிர, நாம் செய்யும் எந்தவிதமான நல்ல வேலைத்திட்டங்களும் அவர்களுக்குத் தெரியாது. காலமெல்லாம் நம்மைப் பற்றி விமர்சித்துக் கொண்டே இருப்பது தான் அவர்களின் தொழிலாக இருக்கும் என்று சொன்னால் நாம் என்ன தான் செய்ய முடியும். எதிர்காலத்தில் எனது அரசியலுக்காகக் கடுமையாக உழைத்தவர்கள் என்னை அரசியலிலிருந்து இல்லாமல் செய்ய வேண்டும் என்று கடுமையாக உழைத்தவர்கள் என்று வேறுபாடு எதுவும் என்னிடம் கிடையாது. அனைவரும் எனது பார்வையில் ஒன்று தான். அனைவரும் எனது மாவட்ட மக்கள் என்று தான் இருக்கும். என்னுடன் தொடர்பு கொள்ள நினைப்பவர்கள் தொலைபேசி மூலமோ அல்லது நேரில் சந்திக்க விரும்புபவர்கள் நான் பிரதேசத்தில் நிற்கும் சந்தர்ப்பங்களில் எனது காரியாலயத்தில் என்னைச் சந்திக்க முடியும். அரசியலில் எனக்கெதிராகச் செயற்பட்டவர்கள் அனைவருக்கும் இச்சந்தர்ப்பத்லே ஒரு அழைப்பை விடுகிறேன். கடந்த காலங்களில் நடந்தவைகள் அனைத்தும் நடந்தவைகளாக இருக்கட்டும். இனி வருங்காலம் எமது மாவட்டத்தின் அபிவிருத்திக்காகவும் மாவட்டத்தின் இன ஒற்றுமைக்காகவும் ஒன்றுபட்டுச் செயற்படுவதற்கு என்னுடன் இணைந்து கொண்டு, உங்களது நல்லாலோசனைகளை வழங்குமாறும் கேட்டுக்கொள்கிறேன் என்றும் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

 
Islah MovementIslah News © 2013. All Rights Reserved. Powered by Islah Media
Desiged By. Aslam.M
Top