நாட்டின் பல பகுதிகளில் வீசிய பலத்த காற்றினால் அதிகமான வீடுகளுக்கு சேதம்
நாட்டின் பல பகுதிகளை வீசிய பலத்த காற்றினால் 40 இற்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன.
வவுனியாவில் வீசிய பலத்த காற்றின் காரணமாக 05 வீடுகள் சேதமாகியுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பொலன்னறுவ லங்காபுர பகுதியில் வீசிய பலத்த காற்றினால் 15 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் குருநாகல் பொலிபித்திகம பகுதியில் வீசிய பலத்த காற்றின் காரணமாக 20 இற்கும் அதிகமான வீடுகளுக்கு சேதம் ஏற்ப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.


0 comments:

Post a Comment

 
Islah MovementIslah News © 2013. All Rights Reserved. Powered by Islah Media
Desiged By. Aslam.M
Top