பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் இரண்டு கட்டங்களாக வெளியிடப்படும் – தேர்தல்கள் செயலகம்
ஆகஸ்ட் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் இரண்டு கட்டங்களாக வெளியிடப்படும் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
முதலில் தபால்மூல வாக்கு முடிவுகள் வெளியிடப்படவுள்ளன.
அதனையடுத்து, தொகுதிவாரியாக தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் என தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டது.
இதன் பிரகாரம், இம்முறை தேர்தலின் முதலாவது தபால்மூல வாக்கு முடிவை இரவு 11 மணி முதல் நள்ளிரவுக்குள் வெளியிட முடியும் என்றும் தேர்தல்கள் செயலகம் தெரிவித்தது.
தொகுதி வாரியான தேர்தல் முடிவுகள் தேர்தல் தினத்திற்கு மறுநாள் அதிகாலை முதல் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
Islah MovementIslah News © 2013. All Rights Reserved. Powered by Islah Media
Desiged By. Aslam.M
Top