வாழைச்சேனையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயம்:வைத்தியசாலையில் அனுமதி
கல்குடா செய்தியாளர் வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் தியாவட்டவான் பிரதேசத்தில் கொழும்பு-மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று (17.08.2015) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் காயமடைந்து ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு-கொழும்பு பிரதான வீதியில் தியாவட்டவான் பிரதேசத்தில் திருகோணமலையிலிருந்து ஹம்பாந்தோட்டைப் பிரதேசத்திற்குச் செல்வதற்கு வந்த படி ரக எல்ப் வாகனமும் காத்தான்குடிப் பிரதேசத்திலிருந்து பொலநறுவைக்குச் செல்வதற்கு வந்த மோட்டார் சைக்கிலும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில், மோட்டார் சைக்கிளில் வந்த ஏறாவூர் ஐயங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி அப்துர்ரஹ்மான் (வயது – 33) மற்றவர் காத்தான்குடியைச் சேர்ந்த றப்லான் (வயது – 30) ஆகிய இருவருமே காயமடைந்தவர்கள் என்று வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், வானத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment