
பொதுத் தேர்தலின் நிமித்தம் வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பெட்டிகளை கொண்டு செல்லும் நடவடிக்கை இன்று (16) காலை 7.30 இற்கு ஆரம்பிக்கப்பட்டதாக தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது.
மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரின் தலைமையின் கீழ் வாக்குப் பெட்டிகள் கொண்டு செல்லுதல் மற்றும் கண்காணிப்பு உத்தியோகஸ்தர்களை வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பி வைத்தல் போன்றன இடம்பெறவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் குறிப்பிடுகின்றார்.
இதேவேளை, ஒரு இலட்சத்து 25,000 அரச உத்தியோகஸ்தர்கள் இம்முறை தேர்தல் கடமைகளுக்காக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.
இவர்களில் வாக்கெண்ணும் நடவடிக்கைகளுக்கு மாத்திரம் 70,000 பேர் கடமையில் ஈடுபடவுள்ளதாகவும் மேலதிக தேர்தல்கள் ஆணைாயாளர் கூறியுள்ளார்.
இதனிடையே பல வாக்களிப்பு நிலையங்களை ஒன்றிணைத்து வாக்களிப்பு வலயங்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் குறிப்பிடுகின்றார்.
மேலும் வாக்களிப்பு ஆரம்பம் முதல் அனைத்து நடவடிக்கைகளையும் குறுந்தகவல்களினூடாக தேர்தல்கள் செயலகத்திற்கு வாக்களிப்பு நிலையத்தின் சிரேஷ்ட தலைமை தாங்கும் அதிகாரியினால் அறிக்கையிடப்படவுள்ளதாகவும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் சுட்டிக்காட்டுகின்றார்.
0 comments:
Post a Comment