சீனாவில் வருகிற ஒக்டோபர் மாதம் தேசிய தினம் கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு கர்ஸ்ட் பள்ளத்தாக்கிற்கு மேலே உள்ள உலாங் தேசிய புவியியல் பூங்காவில் முழுக்க முழுக்க கண்ணாடியால் மட்டுமே ஆன நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதில் நடக்க, சாகசத்தில் விருப்பமுள்ள, பலவீனமற்றவர்களுக்கு மடடுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து, 4,700 அடி உயரத்தில், 200 அடி நீளத்திற்கு இந்த கண்ணாடி நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.
3 அடுக்குகள் கொண்ட இந்த கண்ணாடித்தளம் 10 டன் எடை கொண்டது. மலையை ஒட்டி, 3 அடி அகலத்தில், 2.5 அங்குல கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ள இந்த திகில் நடைபாதையில் நடப்பவர்கள், அருகிலுள்ள தியான்மென் மலையின் எழில் கொஞ்சும் அழகை ரசிக்கலாம்.
கண்ணாடி பாதையின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்காக சுற்றுலா பயணிகள், காலணிகளை கழற்றிவிட்டு நடக்க பூங்கா நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்த பாதை குறித்த தகவல்கள், புகைப்படங்களுடன் இணையதளத்தில் வெளியானதையடுத்து, சுற்றுலா பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.




0 comments:
Post a Comment