ஏமாறுகின்றவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள்

ஏமாற்றி பிழைத்துக் கொண்டே இருப்பார்கள்

சமூகம் விழித்துக் கொள்ளாத வரையில்,

அவர்களின் துயரங்களும் துடைக்கப்படமாட்டாது.

சஹாப்தீன் -


அரசாங்கத்திலிருந்து நீதி அமைச்சரும்மு.காவின் தேசிய தலைவருமான ரவூப் ஹக்கிமை விலக்கவேண்டுமென்ற கோரிக்கையை பொது பலசேனவின் செயலாளர் கலகொட அத்த ஞானசார தேரர் அடிக்கடிஅரசாங்கத்திடம் முன் வைத்துக் கொண்டிருக்கின்றார்ஆனால்இவரின் இக்கோரிக்கை பற்றி அரசாங்கமோ,ரவூப் ஹக்கிமோ எக்கருத்தினையும் முன் வைக்கவில்லை.
அரசாங்கத்திலிருந்து தாமாக விலகிக் கொள்ளும் எண்ணம் ரவூப் ஹக்கிமிடம் அறவே கிடையாதுதன்னைஅரசாங்கம் பிடறியில் பிடித்துத் தள்ள வேண்டும்அப்போதுதான் அரசியல் இலாபமடைந்துகொள்ளலாமென்றதொரு கணக்கு ரவூப் ஹக்கிமிடம் இருக்கின்றதுஅதே வேளைரவூப் ஹக்கிமிமைபிடித்து தள்ளிவிடும் திட்டம் அரசாங்கத்திடம் இப்போதைக்கு கிடையாதுரவூப் ஹக்கிமை அரசாங்கத்தில்வைத்துக் கொண்டே மு.காவின் ஆதரவை மழுங்கடிக்கச் செய்ய வேண்டுமென்றதொரு திட்டம்ஆளுந்தரப்பில் இருக்கின்றதுஇதனால்தான்மு.காவை அரசாங்கம் வெறும் போடுகாயாக வைத்துக்கொண்டிருக்கின்றது.
இதே வேளைமு.காவும்அதன் தலைவரும் அரசாங்கத்தில் இருப்பதா இல்லையா என்பதனைதீர்மானிக்கின்ற சக்தி அக்கட்சியின் உயர்பீடத்திற்கு இருக்கின்றதா என்றதொரு சந்தேகம் எழவும்செய்கின்றதுஏனெனில்முஸ்லிம்களுக்கு எதிராக இன்றைய அரசாங்கத்தின் ஆட்சியில் பௌத்த இனவாதஅமைப்புக்கள் மேற்கொண்டு வருகின்ற அநீயாயங்களுக்கு தகுந்த நடவடிக்கைகளில்லை என்றகுற்றச்சாட்டையும்வேறு காரணங்களையும் முன் வைத்துமு.காவின் தலைவர் ரவூப் ஹக்கிம் அமைச்சர்பதவியை துறக்க வேண்டுமென்றதொரு தீர்மானம் மு.காவின் உயர்பீடத்தில் எடுக்கப்பட்டதுஆயினும்,ரவூப் ஹக்கிம் அமைச்சர் பதவியை துறக்கவில்லைஅமைச்சர் பதவியை துறந்தால் முஸ்லிம்களின்பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுமா என்ற கேள்வி முன் வைக்கப்படுகின்றதுஅப்படியாக இருந்தால்,அரசாங்கத்தில் இருக்கின்ற நிலையில் முஸ்லிம்களினதும்மு.காவினதும் தகுதியும்கௌரவமும்எப்படியுள்ளதென்பதனை நாம் சொல்ல வேண்டியதில்லை.
இதே வேளைமு.காவின் தலைவர் ரவூப் ஹக்கிம் கட்சியின் உயர்பீடத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படிஏன் அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்யவில்லை என அக்கட்சியின்திகாமடுல்ல தேர்தல் மாவட்டஉறுப்பினர் எச்.எம்.எம்.ஹரிஸிடம் கேட்ட போதுஅமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்துஎரியும்நெருப்பில் எண்ணெய் ஊற்றும் வேலையை செய்ய வேண்டாமென்று அகில இலங்கை ஜம்மிய்யத்துல்உலமா சபை கேட்டுக் கொண்டதுஅதன்காரணமாகவே தலைவர் அமைச்சர் பதவியை இராஜினாமாச்செய்யவில்லை என தெரிவித்தார்.
ரவூப் ஹக்கிம் அமைச்சர் பதவியை துறக்க வேண்டுமென்ற தீர்மானத்தை எடுப்பதற்கு முன்னதாகஅதன்தாக்கங்களைப் பற்றி ஆராய்ந்து பார்க்காமலா முடிவுகள் எடுக்கப்பட்டன என கேட்க விரும்புகின்றோம்.மிகவும்ஆழமாக கலந்துரையாடியதன் பின்னர்தான் ரவூப் ஹக்கிம் அமைச்சர் பதவியை இராஜினாமாச்செய்ய வேண்டுமென்று முடிவு எடுக்கப்பட்டிருப்பின்மு.காவின் உயர்பீடத்தின் தீர்மானத்தை மாற்றுகின்றஅதிகாரம் அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபைக்கு இருக்கின்றதாஅத்தகைய அதிகாரம் அகிலஇலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபைக்கு இருக்குமாக இருந்தால்மு.காவின் உயர்பீடத்தின் அந்தஸ்துஎன்ன?
ரவூப் ஹக்கிம் அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்தால்அடுத்த கனம்மு.கா முழுமையாகஅரசாங்கத்திலிருந்து விலகிக் கொண்டதாகவே அமையும்இதன் பின்னர்அரசாங்கத்தில் அனுபவித்துக்கொண்டிருக்கும்சுகங்களும்உழைப்புக்களும் இல்லாமல் போய்விடும்இதனை இழப்பதற்கு மு.காவின்நாடாளுமன்றமாகாண சபைகளின் உறுப்பினர்களுக்கு ஒரு துளிகூட இஸ்டமில்லைதமது இந்த சுயநலமுகத்தை மூடி மறைத்துக் கொள்ளவே அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபையின்வேண்டுகோளுக்கு அமைவாகவே ரவூப் ஹக்கிம் அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்யவில்லையெனஅக்கட்சியின் முக்கிய புள்ளிகளின் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபை முஸ்லிம்கள் மத்தியில் உள்ள மிகவும் முக்கியமானதும்,பிரதானதுமானதொரு அமைப்பு அதன் கருத்தை மதிப்பது அவசியமென்று மு.காவின் தரப்பில் காரணம் முன்வைக்கப்படலாம்தாங்கள் அரசாங்கத்தில் சுயபுத்திக்கு இருக்க வேண்டுமென்பதற்காக மு.கா அகிலஇலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபையை கேடயமாக பயன்படுத்திக் கொள்ளுகின்றதுஇதே அகிலஇலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபை எல்லா முஸ்லிம் கட்சிகளும் ஒற்றுமையுடன் ஒரே குடையின் கீழ்இயங்க வேண்டுமென்று பல தடவைகள் கோரிக்கைகள் முன் வைத்த போதுமு.கா உட்பட ஏனையகட்சிகளும் அந்த வேண்டுகோளை ஏற்றுக் கொள்ளவில்லைசெவிடர்களாகவே அனைத்து முஸ்லிம்தலைவர்களும் இருந்து கொண்டார்கள்ஆதலால்தேவைக்கு ஏற்றவகையில் அகில இலங்கைஜம்மிய்யத்துல் உலமா சபையின் பெயர் பயன்படுத்தப்படுகின்றது என்பதுதான் உண்மையாகும்.
மு.காவில் அரசியல் முகவரியை பெற்றுக் கொள்வதற்காக காலடி எடுத்து வைத்தவர்களில் பலர்இன்றுமுகவரிகளைப் பெற்று கொளுத்துப் போயுள்ளார்கள்அரசாங்கத்தில் இன்னும் சில காலங்கள் இருந்து தாம்இன்னும் கொளுத்துக் கொள்ளவே நாட்டங் கொண்டுள்ளார்கள்உண்டியல் மூலமாக நிதியைப் பெற்று,அரசியல் செய்த மு.காதற்போது கோடிஸ்வரர்களை உற்பத்தி செய்யும் கட்சியாக வளர்ச்சி கண்டுள்ளது.
இதே வேளைமு.காவிற்கு உயர்பீடம் என்றதொரு அதிகார அமைப்பு இருந்தாலும்இதற்கு மேலாக,உத்தியோகப்பற்ற வகையில் சுப்ரிம் உயர்பீடமொன்று இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றனஇதில்,தலைவரின் உறவினர்கள் முதல் கட்சியின் ஒரு சில முக்கிய புள்ளிகளும் இருப்பதாகவும்தெரிவிக்கப்படுகின்றனஉயர்பீடத்தில் என்னதான் முடிவுகள் எடுக்கப்பட்டாலும்இந்த சுப்ரீம் உயர்பீடத்தில்எடுக்கப்படும் தீர்மானங்கள்தான் அமுல்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.
இதே வேளைஏனைய கட்சிகளை எடுத்துக் கொண்டால்அவற்றின் நடவடிக்கைகள் மு.காவினை விடவும்சிறந்ததென்று கூற முடியாதுஎல்லாக் கட்சிகளும் முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றிக் கொண்டேஇருக்கின்றன.
அளுத்கமபேருவளைதர்ஹா நகர்பன்னல்ல பகுதிகளில் முஸ்லிம்கள் தாக்கப்பட்ட போதுமுஸ்லிம்அரசியல் தலைவர்கள் வேகமாக பறந்தார்கள்துன்படைந்தார்கள்கண்ணீர் வடித்தார்கள்முஸ்லிம்களின்மீது இனவாத தாக்குதல்கள் நடைபெற்றுள்ளனபொலிஸார் பாதுகாப்பு அளிக்க தவறிவிட்டார்கள்என்றெல்லாம் அறிக்கைகளை ஊடங்களில் விட்டார்கள்.
ஆனால்அவை யாவும் போலியானது என்பது கடந்த 2014.07.10ஆம் திகதி வியாழக்கிழமைதெரியவந்துள்ளதுஅன்று நாடாளுமன்றத்தில் ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவினால்நாட்டில் சட்டம்ஒழுங்கின் இன்றைய நிலை பற்றியதொரு பிரேரணை முன் வைக்கப்பட்டதுஇதன் போது,அளுத்கமபேருவளைதர்ஹா நகர்பன்னல்ல பகுதிகளில் முஸ்லிம்களின் மீது மேற்கொள்ளப்பட்டதாக்குதல்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டது.
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த விவாதத்தில் நாடாளுமன்றத்தில் உள்ள 18 முஸ்லிம்உறுப்பினர்களில் .எச்.எம்.அஸ்வர் மற்றும் எம்.எச்..ஹலீம் ஆகிய இருவரைத் தவிர வேறுயாரும் இந்தவிவாதத்தில் கலந்து கொள்ளவில்லை.
ஏற்கனவே இவ்வாறானதொரு விவாதம் நடைபெற இருக்கின்றதென்பது தெரிந்திருந்த போதிலும்முஸ்லிம்நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளாமை வெட்கப்பட வேண்டியதாகும்இந்த விவாதம் சுமார் 4 ½மணித்தியாலங்கள் இடம்பெற்றுள்ளன.
முஸ்லிம்களின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களைப் பற்றி அறிக்கைகளை அடுக்கிக் கொண்டுபோவதில் பயனில்லைகதைக்க வேண்டிய இடத்தில் கதைக்க வேண்டும்நாடாளுமன்றம் என்பதுநாட்டிலுள்ள ஏனைய சபைகளை விடவும் உயர்ந்தாகும்இங்கு பேசப்படுகின்ற விஷயங்கள் வரலாறாககென்சாட்டில் பதியப்பட்டிருக்கும்இங்கு வாய் திறக்க முடியாதவர்கள் முஸ்லிம்களின் மக்கள்பிரதிநிதிகளாகவோதலைவர்களாகவோ இருக்க வேண்டியதில்லை.
அன்று நடைபெற்ற விவாதத்தில் அளுத்கமபேருவளைதர்ஹா நகர்பன்னல்ல பகுதிகளில் இடம்பெற்றசம்பவங்களுக்கு முஸ்லிம்களே காரணம் என்று பேசப்பட்டுள்ளதுஇதனை மறுத்துக் கூறுவதற்குயாருமில்லை என்பது முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்நாட்டு முஸ்லிம்களுக்கு செய்த மிகப்பெரிய துரோகச் செயலாகும்.
அன்றைய தினம் நாடாளுமன்றத்தில் அமைச்சர்கள் அதாவுல்லாபௌஸிறிசாட்பதியுதீன்பசீர்சேகுதாவூத்பிரதி அமைச்சர் அப்துல் காதர்நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹஸன்அலிஅஸ்லம்,தௌபீக் ஆகியோர்கள் விவாதம் நடைபெற்ற போது சபையில் அமர்ந்து இருந்த போதிலும்வாய்திறந்துபேசவில்லைஇத்தகையதொரு விவாதம் நடைபெறுமென்று தெரிந்து இருந்தும் பலர் நாடாளுமன்றத்திற்குசமூகமளிக்கவில்லை.
முஸ்லிம்களுக்காக ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க மாத்திரமே குரல் கொடுத்துள்ளார்.அவர் சிங்கள மக்களின் வாக்குகளினால் நாடாளுமன்றம் சென்றவராக இருந்தும்முஸ்லிம்களுக்காகபேசியுள்ளார்.
குறிப்பிட்ட விவாதத்தில் கலந்து கொண்ட.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி ஜயவிக்ரமபெரேராமஹிந்தராஜபக்ஷ அரசாங்கத்தில் உள்ள முஸ்லிம் அமைச்சர்கள் ஆடை அணிந்துதான்இருக்கின்றீர்களா எனக் கேட்க விரும்புகினடறேன்உங்களுக்கு வெட்கம்மானம்சூடுசொரணைஎதுவுமில்லையா?... என பல கேள்விகளை முன் வைத்துள்ளார்.
அமைச்சர் ரோஹித அபேவிக்ரமமுஸ்லிம் சமூகத்திற்கு எதிரான வன்முறைக்கு முஸ்லிம்களேகாரணமென்று கூறியுள்ளார்.
பிரதமர் டி.எம்.ஜயரத்னஅளுத்கமபேருவளை போன்ற இடங்களில் நடைபெற்ற வன்செயலில் 03 பேர்மரணமடைந்துள்ளதுடன், 04 வீடுகளும்ஒரு தொழிற்சாலைமே முற்றாக சேதமடைந்தன. 125 வீடுகளும், 35 வர்த்தக நிலையங்களும் பகுதியளவில் சேதத்திற்குள்ளாகியது எனத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு முஸ்லிம்களை முற்று முழுதாக குற்றவாளிகளாக்கி அரசாங்கத்தின் அமைச்சர்கள்நாடாளுமன்றத்தில் பேசிக் கொண்டிருக்கும் போதுஅதனை எதிர்த்து முஸ்லிம்கள் சார்பான கருத்துக்களைமுன் வைப்பதற்கு எவரும் சபையில் இல்லை என்றால்கதிரைகளை சூடாக்குவதற்கும்ஊடகங்களில்முஸ்லிம் உணர்வை காட்டுவதற்குமா முஸ்லிம்கள் வாக்களித்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பியது.
ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க பிரதமரின் புள்ளி விபரங்களை மறுத்துரைத்ததோடு, 25வீடுகள் முற்றாகவும், 400இற்கும் மேற்பட்ட கடைகளும், 03 பள்ளிவாசல்களும் பகுதியளவில்சேதமடைந்துள்ளனகளுத்துறை மாவட்ட செயலகத்தின் அறிக்கையின் படி பேருவளையில் 193 வீடுகளும்,மத்துகமவில் 63 வீடுகளும்களுத்துறையில் 05 வீடுகளும்பெந்தோட்டையில் 27 வீடுகளும் எனமொத்தமாக 288 வீடுகளும், 199 கடைகளும், 03 பள்ளிவாசல்களும் பகுதியளவில் சேதமடைந்துள்ளனஎன்று முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களை புள்ளி விபரமாக தெரிவித்துள்ளார்.
ஆகஇன்று முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்றுக் கொண்டிருக்கும் சம்பவங்களைப் பற்றிநாடாளுமன்றத்தில் பேசுவதற்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களில்லாத நிலையேகாணப்படுகின்றனதேர்தல் காலங்களில் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக முஸ்லிம் அரசியல்தலைமைகள் முஸ்லிம்களைப் பற்றி போலியாக பேசிக் கொண்டிருக்கின்றார்கள்ஆனால்,நாடாளுமன்றத்தில் பெட்டிப்பாம்பாகவே அமர்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
முஸ்லிம்கள் வாக்களிப்பதுஒரு சிலர் நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும்அமைச்சர் பதவிகளைப்பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவல்லமுஸ்லிம்களுக்கு அவ்வப்போது ஏற்படும்பிரச்சினைகளுக்கு நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பதற்கும்அதற்கான தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதற்குமாகும்இது ஒவ்வொரு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் இருக்கின்ற சமூகக்கடமையாகும்இந்த சமூகக் கடமையை நிறைவேற்றுவதற்கு தவறுகின்றவர்களை அடுத்த முறையும்நாடாளுமன்றத்திற்கு அனுப்பக் கூடாது.
ஆனால்முஸ்லிம் வாக்காளர்கள் கடமைகளை மறந்து செயற்பட்டுக் கொண்டிருப்பவர்களையே மீண்டும்,மீண்டும் நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
ஏமாறுகின்றவர்கள் இருக்கும் வரைக்கும்ஏமாற்றிக்
கொண்டிருப்பவர்கள் பிழைத்துக் கொண்டிருப்பார்கள்ஒரு சமூகம்
விழித்துக் கொள்ளாத வரையில்அவர்களின் துயரங்களும்
துடைக்கப்படமாட்டாது.

நன்றி: வீரகேசரி வாரமலர்

0 comments:

Post a Comment

 
Islah MovementIslah News © 2013. All Rights Reserved. Powered by Islah Media
Desiged By. Aslam.M
Top