நேற்று சனிக்கிழமை ரம்புக்கணையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி வந்த ரயிலொன்று கோட்டையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது அதனுள் வைக்கப்பட்டிருந்த வெடி பொருளொன்று வெடித்ததில் சிறு வியாபாரி ஒருவர் காயமடைந்துள்ளார்.
ரம்புக்கணையிலிருந்து கோட்டை நோக்கி நேற்று இரண்டு மணியளவில் சற்று தாமதமாக வந்த ரயிலின் இரண்டாவது பெட்டிக்குள் ஏறி வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்ட சிறுவியாபாரி ஒருவர் பெட்டியினுள் கிடந்த பொருளான்றை எடுத்த போது அது வெடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் பிற்பகல் 2.30 மணியளவில் கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருமையில் நடந்துள்ளது. விளையாட்டுப் பொருள்களை விற்கும் ஜெகத் ஜெயவீர என்பவரே இதில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் காலில் சிறுகாயங்கள் ஏற்பட்டுள்ளன.
இதையடுத்து இந்த ரயிலின் இரண்டாம் பெட்டி அகற்றப்பட்டு, கோட்டை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இப் பெட்டிக்குள் எவ்வாறு இந்த வெடிபொருள் வந்தது, இத்துடன் தொடர்புடையவர்கள் யார் ? என்பது குறித்து விரிவான விசாரணையை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
இந்த சம்பவத்தால் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் ரயில் சேவைகளுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை
0 comments:
Post a Comment