11910984_410809105793544_725986332_n-min) சீன முஸ்லிம்களின் வரலாற்றைப் பொறுத்த வரை மிகப்பழமை வாய்ந்தவை. இலங்கையில் இஸ்லாம் அறிமுகமாவதற்குமுன் சீனாவில் இஸ்லாம் அறிமுகமாகி விட்டது. இதனை பல வரலாற்று நூல்களில் எங்களுக்கு காண முடியும். அதே போல், சீனாவின் வளர்ச்சிக்கு சீன முஸ்லிம்களின் பங்களிப்பு அளவிட முடியாது. கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடிப்பதற்கு முன் சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன்னரே (1421), சீன முஸ்லிம் கடல் வழி ஆய்வாளரான ஷெங் ஹி அமெரிக்காவைக் கண்டு பிடித்து விட்டார. என்று சில ஆய்வாளர்கள் கூறுவார்கள். (Zheng He ) இவரை ஷெங் ஹோ என்றால் தான் பல சீனர்களுக்குத் தெரியும். அதே போல், சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கு முஸ்லிம்களின் பங்களிப்பும் அதிகமுள்ளது. சீனாவில் உய்குர் முஸ்லிம்கள் ”சின்ஜியாங்”’ பிராந்தியத்தில் தான் அதிகம் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். அது கணிமமுள்ள செழிப்பான பிரதேசம் என்பதால் அரசின் அராஜகம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே  வருகின்றது. எவ்வாறென்றால் வேலை நாட்களில் மாணவர்கள், அரச ஊழியர்கள் தொழுவதோ, நோன்பு நோற்பதோ கூடாது. இளைஞர்களை பள்ளிவாசல்களை விட்டும் தூரத்தில் வைக்கவே விரும்புகின்றது சீன அரசு. அன்றிலிருந்து இன்று வரையும் உயிரற்ற பிணமாககத்தான் சீன அரசு முஸ்லிம்களைப்பார்க்கின்றது. எனவே, இவர்களுக்கு விடிவு கிடைக்க வேண்டும். அனைவரும் பிரார்த்திப்ப்போம்.

0 comments:

Post a Comment

 
Islah MovementIslah News © 2013. All Rights Reserved. Powered by Islah Media
Desiged By. Aslam.M
Top