
தேர்தல் பிரசார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவடைகின்றன.
நள்ளிரவிற்குப் பின்னர் தேர்தல் சட்டங்களை மீறும் எவருக்கும் பொலிஸ் பிணை வழங்கப்படமாட்டாது என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.
தேர்தலின் போது இடம்பெறக்கூடிய மோசடிகளை உடனே அறிவிப்பதற்காகவும் வாக்களிப்பு நிலைய கடமைகளை ஒழுங்குபடுத்துவதற்காகவும் இன்று குறுந்தகவல் சேவை இன்று அறிமுகம் செய்யப்பட்டது.
EC <இடைவெளி>EV<இடைவெளி> குறித்த மாவட்டம் <இடைவெளி> முறைப்பாட்டை பதிவு செய்து 2343 என்ற இலக்கத்திற்கு அனுப்பி வைப்பதன் மூலம் நேரடியாக தேர்தல்கள் திணைக்களத்திற்கு முறைப்பாடு செய்ய முடியும்.
இதேவேளை, பிரசாரக் கூட்டங்களுக்கு பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள் தொடர்பில் விளக்கமளித்த தேர்தல்கள் ஆணையாளர், ஒரு மாவட்டத்தில் ஒரு கூட்டத்தை 11.45 மணி வரை நடத்த முடியும் எனவும் இசை நிகழ்ச்சிகளைப் பொருத்தமட்டில், வேட்பாளர்கள் கலந்துகொள்ளாவிட்டால் 11.45 மணி வரை அந்த நிகழ்சிகளை நடத்த முடியும் எனவும் கலந்துகொண்டால் 10 மணிக்கு முடிவிற்குக் கொண்டு வர வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இதேவேளை, இன்றிலிருந்து தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் கைது செய்யப்படுபவர்களுக்கு பொலிஸ் பிணை வழங்கும் எதிர்பார்ப்பு இல்லை எனவும் தேர்தல்கள் ஆணையாளர் சுட்டிக்காட்டினார்.
0 comments:
Post a Comment