பாராளுமன்றம் சென்று தனது அரசியலை தொடரவுள்ளதாக நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

பொதுத் தேர்தல் பெறுபேறு தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளவை வருமாறு, 

"2015 பொதுத் தேர்தலில் பல சவால்களுக்கு மத்தியில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்ற பெறுபேறுகளை நான் நேர்த்தியாக ஏற்றுக் கொள்கிறேன். இந்த தேர்தலில் எமது கூட்டமைப்புக்கு வாக்களித்த அனைத்து அன்பான வாக்காளர்களுக்கும் இரவு பகல் பாராது பாடுபட்ட எமது கட்சியாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கிடைத்துள்ள மக்கள் ஆணையின்படி நான் தொடர்ந்து அரசியலில் ஈடுபடுவேன் என்றும் பாராளுமன்றில் ஆசனம் ஏற்று இதுவரை நாட்டுக்கு மக்களுக்கு செய்த சேவையை தொடர்ந்து செய்வேன் என்றும் இந்த சந்தர்ப்பத்தில் விருப்பத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்."
- See more at: http://www.rajaratanews.cf/2015/08/blog-post_593.html#sthash.jxhnb2kS.dpuf

0 comments:

Post a Comment

 
Islah MovementIslah News © 2013. All Rights Reserved. Powered by Islah Media
Desiged By. Aslam.M
Top