மொபைல் உலகில் எத்தனை நிறுவனங்கள் வந்தாலும் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ள நிறுவனம் ஆப்பிள். ஆப்பிள் மொபைலை கையில் வைத்திருப்பதே கவுரவம் என்று கூறும் அளவுக்கு ஒரு நிலையை உருவாக்கிய அதன் தந்திரம் சொல்லில் அடங்காது.
இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் தனது அடுத்த தயாரிப்பான ஆப்பிள் 7 மொபைலை வரும் செப்டம்பர் மாதம் சந்தையில் வெளியிட உள்ளதாக உறுதிசெய்யப்படாத தகவல்கள் வெளிவந்தவாறு உள்ளன.
இந்நிலையில் ஆப்பிள் 7 மொபைலில் என்னென்ன வசதிகள் இருக்கலாம் என்பது பற்றிய சில தகவல்கள் கீழே:
ஆப்பிள் கைகடிகாரம் மற்றும் லாப்டாப்பில் உள்ளது போன்று ஃபோர்ஸ் டச் (Force Touch) என்ற வசதியை அறிமுகம் செய்யக்கூடும் என்று கூறப்படுகிறது.
இதன் மூலம் திரையில் மெதுவாக தொடும்போது ஒரு அப்ளிகேசனும் வேகமாக தொடும்பொது அந்த அப்ளிகேசனின் அடுத்தகட்ட செயல்களும் கிடைக்கும். உதாரணமாக, நீங்கள் திரையை மெதுவாக தொடும்போது மின்னஞ்சல் பக்கம் தோன்றும். வேகமாக தொட்டால் மின்னஞ்சலுக்கு பதல் அளிக்கும் பக்கம் தோன்றும்.
காமிராவை பொருத்தவரையில் பின்பக்கம் 12 மெகாபிக்சல்களும் முன்பக்கம் 4 மெகாபிக்சல்களும் இருக்கக்கூடும். ஆப்பிள் 7 திரைகள் முந்தைய ஆப்பிள் 6 மற்றும் 6 பிளஸ் மாடல்களின் திரையை விட பெரிதாக இருக்கும்.
மேலும் ஹோம் பட்டனில் ஆப்பில் லோகோவும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைசியாக ஒரு தகவல் வரும் செப்டம்பர் 9ஆம் திகதி ஆப்பிள் 7 அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Islah MovementIslah News © 2013. All Rights Reserved. Powered by Islah Media
Desiged By. Aslam.M
Top