அண்மைக்காலமாக ஸ்மார்ட்போன் பாவனையாளர்களிடத்தில் வேகமாக பரவி வரும் ஒரு மென்பொருள் தான் “SOMA MESSENGER”. ஏனைய மென்பொருட்கள் போன்றல்லாது, Free message, Video call, Voice call போன்ற அனைத்து வசதிகளும் இதில் காணப்படுகின்றமையே இதற்குக் காரணமாகும்.
எனினும் இதன் பாதுகாப்புத் தன்மை பற்றி சில சிக்கல்கள் இருப்பதாக சில மென்பொருள் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, பாதுகாப்பற்ற மற்றும் கடவுச்சொல் வழங்கப்படாத WI-FI மூலம் SOMA வை நாம் பயன்படுத்தும் போது எமது தரவுகள் திருடப்பட வாய்ப்புள்ளது. மேலும், சாதரணமாக “HACK” செய்யத் தெரிந்தவர்களுக்குக் கூட இந்த மென்பொருளை இலகுவாக “ஹேக்” செய்துவிடலாம் என்பதோடு, இம்மென்பொருளைத் தாண்டி எமது ஸ்மார்ட்போனின் ஏனைய மென்பொருள்களில் உள்ள தரவுகளும் இதன் மூலம் திருடப்படலாம் எனவும் கூறப்படுகிறது. அதேபோன்று, எங்களை அறியாமலேயே எமது SOMA மென்பொருளில் இருந்து ஏனையவர்களுக்கு MESSAGE கள் செல்வதற்கும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
இது ஒரு புதிய மென்பொருளாக இருப்பதால் இதன் பாதுகாப்புத் தன்மை இன்னும் முழுமையாக உறுதி செய்யப்படவில்லை. இம்மென்பொருளை தயாரித்த நிறுவனமே, கடவுச்சொல் வழங்கப்படாத WI-FI, மற்றும் பாதுகாப்பற்ற “நெட்வொர்க்” களை தவிர்க்குமாறு வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments:
Post a Comment