
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அக்குரஸ்ஸ நகரில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டார்.
இதன்போது, வரலாற்றில் அமைதியான மற்றும் முறையான தேர்தலை நடத்தும் இயலுமை தற்போதுள்ள நல்லாட்சி அரசாங்கத்திற்கே உள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், சட்டத்தை மதிக்கும் பண்பை தேர்தல் தினத்தன்றும் பின்பற்றி அமைதியான தேர்தலை நடத்த ஒத்துழைக்குமாறு பிரதமர் கேட்டுக்கொண்டார்.
அத்துடன், நல்லாட்சி அரசாங்கமான தமக்கு எதிரிகள் கிடையாது எனவும் மாற்றுக் கருத்துடையவர்களே இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment