
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கடிதத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பதில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் .
ஜனாதிபதியின் கடிதத்தில் வேறு தரப்பினரால் வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் முன்வைக்கப்பட்டுள்ள அடிப்படையற்ற விமர்சனங்களை நிராகரிப்பதாக பதில் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுளள்து .
கடந்த ஜனவரி மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் முழுவதும் வெளியாகும் முன்னரே அலரி மாளிகையில் இருந்து வெளியேறியதாகவும் தேர்தல் முடிவடைந்து சில தினங்களின் பின்னர் கட்சி தலைமைத்துவம் மற்றும் கட்சியை ஜனாதிபதியின் கோரிக்கையின் பிரகாரம் தாம் வழங்குவதற்கு தீர்மானித்ததாகவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015 பெப்ரவரி மாதமளவில் பெரும்பான்மையான கட்சி ஆதரவாளர்களினதும் மக்களினதும் வேண்டுகோள் மீண்டும் தாம் செயற்பாட்டு அரசியலில் பிரவேசிப்பதற்குக் காரணமாக அமைந்ததாக முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனவரி மாதம் 9 ஆம் திகதி தாம் மக்களின் அபிப்பிராயத்திற்கு மதிப்பளித்ததைப் போன்றே பொதுத் தேர்தலில் மக்களின் அபிப்பிராயத்திற்கு ஜனாதிபதி மதிப்பளிப்பார் என எதிர்ப்பார்ப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தனது பதில் கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment