
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்துகொண்ட தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று (13) வலஸ்முல்ல நகரில் இடம்பெற்றது.
இதன்போது சஜித் பிரேமதாச பின்வருமாறு தெரிவித்தார்;
மைத்திரிபால சிறிசேன என்பவரை யாராலும் விருப்பத்திற்கு ஏற்ப நடத்த முடியாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். தனது போலியான நடிப்பால் மைத்திரிபால சிறிசேனவை ஏமாற்றி விடலாம் என மஹிந்த ராஜபக்ஸ நினைத்துக் கொண்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஸ இந்த விளையாட்டைப் பலருடன் விளையாடியிருக்கலாம். ஆனால், மைத்திரிபால சிறிசேனவிடம் அது செல்லாது. கடந்த சில தினங்களாக பெருத்த மண்டையுடன் இருந்த ஐக்கிய தேசியக் கட்சி கைப்பொம்மைகள் தற்போது சோளக்காட்டு பொம்மையின் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
0 comments:
Post a Comment