அறுவை சிகிச்சைக்கு முன் கேட்கும் இசை சிகிச்சையின் பின்னர் உடல்நிலை வேகமாக சீரடைய உதவும்
இனிமையான இசைக்கு நம்மை மயக்கும் சக்தி மட்டுமல்ல பல்வேறு நோய்களை குணமாக்கி காக்கும் சக்தியும் உள்ளது என்பது நம்மில் பலர் ஏற்கனவே அறிந்த ஒன்றுதான்.
இந்தவகை ஆராய்ச்சியின் அடுத்தகட்டமாக, உங்களுக்கு பிடித்த இசையை தினந்தோறும் அரைமணிநேரம் ரசித்து கேட்டாலே போதும், உங்களுக்கு மாரடைப்பு வராமல் இருக்கும் என்பது ஒரு ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
இதே வரிசையில், அறுவை சிகிச்சைக்கு முன் கேட்கும் உங்களுடைய விருப்பமான இசை, சிகிச்சைக்கு பின்னர் உடல்நிலை வேகமாக சீரடைய உதவும் என சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று நிரூபித்துள்ளது.
இங்கிலாந்து மருத்துவமனைகளில் சுமார் 7000 நோயாளிகளிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், நோயாளிகளின் தலையணையில் பதிக்கப்பட்ட ஸ்பீக்கர்கள் மூலம் அவர்களுக்கு பிடித்த இசையை ஒலிபரப்பினர். இந்த புதிய முறையின் மூலம் இவர்களில் பெரும்பாலானவர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இந்த இசை குறித்த ஆய்வு மயக்க மருந்து கொடுக்கப்பட்ட பின்னரும் நல்ல பலனை தந்தது, ஆய்வாளர்களுக்கே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக அறுவை சிகிச்சையின் போது ஏற்படும் மன அழுத்தம் மற்றும் வலியும் இசையால் குறைவதாகவும் தெரியவந்துள்ளது.
எனினும், இந்த இசை மருத்துவர்களையும் பாதிக்கலாம் என்பதால் இதைப் பயன்படுத்துவதில் சற்று குழப்பம் நிலவி வருகிறது.

0 comments:

Post a Comment

 
Islah MovementIslah News © 2013. All Rights Reserved. Powered by Islah Media
Desiged By. Aslam.M
Top